ழகரம்
(முதல் பருவம்)
- (குறள் – 66)
- திருவள்ளுவர்
(குழல் - காற்று இசைக் கருவி; யாழ் – கம்பிக்கருவி)
தம் குழந்தைகளின் மழலைப்பேச்சுகளைக் கேட்டு மகிழாதவர்களே, குழலின் ஓசையும் யாழின் ஓசையும் இனியவை எனக் கூறுவர்.
பேராசை பெரு நட்டம்.
உயிர்கள் அனைத்தையும் மகிழ்விப்பது இசை. இது மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் ஆற்றல் உடையது. இசைக்கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும்போது அது செவிகளுக்கு மட்டுமன்றிச் சிந்தைக்கும் விருந்தாகிறது. இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக் கருவிகள் ஆகும்.