ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

14.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் சொற்களைச் சரியாகப் பொருத்திப் பாடலைப் பாடுக.

வாழ்வோமே மகிழ்வோமே வெல்வோமே நடப்போமே
கற்போமே செய்வோமே படிப்போமே நினையோமே

இன்னிசைகேட்டு __________________________
இன்பமாய் நாம் __________________________
அன்பால் உலகை __________________________
அண்ணல் வழியில் __________________________
பள்ளி சென்று __________________________
பாடம் நன்றாய்ப் __________________________
எவர்க்கும் தீங்கு __________________________
என்றும் நன்மை __________________________

14.11 உயர்நிலைத்திறன்

உரைப்பகுதியில் விடுபட்ட சொற்களை நிரப்பி, முழுமையாக்குக.

(அறிய, முறையை, இயல்புகளை, ஓவியமாகவோ, ஆற்றல், இயற்கை, கலைஞன்)

கலைஞன் ------- அமைப்புகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். பொருள்களின் பல்வேறு ---------யும் அவற்றுக்கேற்ப பொருத்தத்தையும் நன்கு ----------- வேண்டும். தன் நினைவில் தோன்றுவனவற்றைக் காவியமாகவோ, --------, சிற்பமாகவோ வெளிப்படுத்தும் --------- பெற்றிருத்தல் வேண்டும். கலையின் பொருளையும் வாழ்க்கை ------யும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். இவை அனைத்தும் ஒன்றாகப் பெற்றவனே ------- ஆவான்.

14.12 செயல்திட்டம்

உங்களுக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு ஏதேனும் ஓர் இசைக்கருவி செய்து வருக.