ழகரம்
(முதல் பருவம்)
சிறந்த குடிப்பிறப்பு, ஒழுக்கம், மேன்மை, பல நூல்களைக் கற்றறிந்த தெளிவு, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி எடுத்துரைக்கும் ஆற்றல், உலகியல் அறிவு, உயர்குணம் ஆகிய பண்புகள் ஆசிரியருக்கு உரியன.
பிளாட்டோ ஒரு கிரேக்கத் தத்துவஞானி. இவர் ஏதென்ஸ் நகரில் ஒரு கல்விக்கழகத்தினை நிறுவினார். பிளாட்டோ தமது கல்விக் கருத்துகளைத் தொகுத்துக் ‘குடியரசு’, ‘சட்டங்கள்’ என்னும் நூல்களாக வெளியிட்டார். கட்டாயக் கல்வி, இராணுவப் பயிற்சி, தொழிற்கல்வி போன்றவை இவரது சிந்தனைகளில் குறிப்பிடத்தக்கவை.
வேளாண்மை துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் நிலங்களைப் பண்படுத்துவதற்குப் புதிய கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதன் முலம் வேளாண்மையில் உடல் உழைப்பின் பங்கு குறைந்து இயந்திரங்களின் பங்கு பெருகியது. ‘டிரில்’ என்னும் விதை விதைக்கும் கருவி, எஃகினாலான கலப்பைகள், கதிர் அறுக்க உதவும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்ணை வளப்படுத்த பயிர் சுழற்சி முறை செயல்படுத்தப்பட்டது.
லுட்விக் வான் பீத்தோவன், தமது ஆறாவது வயதிலேயே மேடையேறி, இசைத் திறமையை வெளிப்படுத்தினார். இவர் ஜெர்மனி நாட்டிலுள்ள பான் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தன்னுடைய தந்தை யோகன் பீத்தோவனிடம் இசை பயின்றார். அது மட்டுமல்லாமல், பிறரிடமும் பியானோ, வயலின் ஆகியவற்றை வாசிக்கக் கற்றுக்கொண்டார். பீத்தோவன் வாழ்வில் குறிப்பிடத்தக்க இசை ஆசிரியர் கிறிஸ்டியன் கோட்லாப் நீஃப். நீஃப்பின் துணை இசைக்கலைஞராகப் பணியாற்றிய பீத்தோவன், அரசவைக் குழுவிலும் இடம்பெற்றார்.
மாடங்கள், முற்றங்கள் உடைய இல்லங்களைத் தமிழர் உருவாக்கினர். சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கதவுகளை அமைத்தனர். காற்றோட்டத்திற்காக சன்னல்களைப் பொருத்தினர்.