ழகரம்
(முதல் பருவம்)
திருவூர் என்னும் சிற்றூரில் மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர்மீது ஊரில் உள்ளோர் மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். ஏனெனில், தம்மிடம் மருத்துவம் பார்த்துக் கொள்பவர்கள் வசதி இல்லாதவர்களாக இருந்தால் அவர்களிடம் பணம் எதுவும் கேட்கமாட்டார். வசதி படைத்தவர்களிடமே பணம் கேட்டு வாங்குவார். ஒருநாள் இரவு பத்து மணிக்கு அவருடைய வீட்டுக்கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தார் மருத்துவர். அங்கு முதியவர் ஒருவரும் இளைஞன் ஒருவனும் நின்றிருந்தனர். இளைஞன் மிகவும் பதற்றத்துடன், “ஐயா, என் மனைவிக்கு உடல்நலமில்லை. உங்களை அழைத்துப்போக வண்டிகூட இருக்கிறது. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. உடனே வந்து மருத்துவம் செய்யுங்கள்” என்று கூறினான். மருத்துவர் முதியவரைப் பார்த்தார். இப்போது முதியவர், மருத்துவரைப் பார்த்து, “ஐயா, என் பேரனுக்கு உடல்நலமில்லை. என்னிடம் செலவு செய்யப் பணமில்லை. அதனால்தான், இரண்டு நாளாக உங்களிடம் எப்படி வருவதென்று தயங்கினேன். ஆனால், எப்படியாவது உங்களைப் பார்க்க நினைத்து இங்கு வந்தேன்” என்றார்.
இருவர் கூறியதையும் கேட்ட மருத்துவர், இளைஞனைப் பார்த்து, “தம்பி, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்கிறாய். வண்டிகூட வைத்திருக்கிறாய். அதனால், பக்கத்து ஊரில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் பணம் வாங்காமல் மருத்துவம் பார்க்கமாட்டார். அதனால், உன்னிடம் வண்டி இருப்பதால் காலத்தை வீணாக்காமல் உடனே அவரிடம் செல். உன் மனைவிக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய். இந்த முதியவரிடம் பொருள் இல்லை. நானும் இல்லாதவர்களிடம் பணம் வாங்குவதில்லை. நான் இவருடன் செல்கிறேன். நீயும் புறப்படு” என்று சொல்லிவிட்டு முதியவருடன் சென்றார் மருத்துவர். ஏழைகளின் கண்களுக்கு அவர் மருத்துவராக மட்டுமன்றி மனிதநேயம் மிக்க மனிதராகவும் தெரிந்தார்.
திருவூர்
மருத்துவர் அவரிடம் மருத்துவம் பார்த்துக் கொள்பவர்கள் வசதி இல்லாதவர்களாக இருந்தால் பணம் எதுவும் கேட்கமாட்டார். ஆகவே ஊரில் உள்ளோர் மருத்துவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர்.
இளைஞன், “ஐயா, என் மனைவிக்கு உடல் நலமில்லை. உங்களை அழைத்துப் போக வண்டி கூட இருக்கிறது. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. உடனே வந்து மருத்துவம் செய்யுங்கள்” என்று மருத்துவரிடம் கூறினான்.
முதியவர் மிகவும் ஏழ்மையானவர். அவரிடம் பணம் இல்லை. அதனால் மருத்துவர் முதியவருக்கு உதவ நினைத்தார்.
மனித நேயம்