பயிற்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சச் சொற்களைக் கண்டறிக
கீழே கொடுக்கப்பட்டுள்ள உரைப்பகுதியிலிருந்து சரியான சொற்களை இழுத்து பெட்டிகளில் இடவும்:
திருக்குறளுக்கு இல்லாச் சிறப்புகளே இல்லை.
பிற நூல்கள் கூறாக் கருத்துகளை இந்நூல் கூறுகிறது.
இதனால்தான், உலக மக்களுக்குத் திருக்குறள் மீது தீராக் காதல் உள்ளது.
இந்நூலில் கூடா நட்பு,கூடா ஒழுக்கம்போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் கற்று நல்வழியில் நடக்கவேண்டும்.