ழகரம்
(முதல் பருவம்)
பணக்காரர் ஒருவர் வெளியூருக்குச் சென்றார். இரவு நேரமாகிவிட்டதால், தங்கும் விடுதி ஒன்றில் ஓய்வெடுத்தார். சிறிது நேரத்திற்குப் பின், அவருக்குத் திடீரென விழிப்பு வந்தது. அப்போது, தமக்கு அருகில் படுத்திருந்த ஒருவர், தம் காதிலிருந்த விலையுயர்ந்த கடுக்கனைக் கழற்றுவதை அவர் கண்டார். ஆயினும், அந்தப் பணக்காரர் ஒன்றும் தெரியாததுபோல் கண்களை மூடிக்கொண்டிருந்தார். இப்போது, அந்த ஆள், தம்முடைய மற்றொரு காதிலிருந்து கடுக்கனைக் கழற்றுவதற்கு வசதியாக அந்தப் பணக்காரர் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்தார். அந்த ஆளும் இதைத்தானே எதிர்பார்த்தோம் என்பதுபோல, பணக்காரரின் இன்னொரு கடுக்கனையும் கழற்றி, இரண்டையும் தம் காதில் அணிந்துகொண்டார்.
மறுநாள், பணக்காரர் தம் ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார். அப்போது, காவலர் இருவர் அவரைத் தேடி வந்தனர். அவர்களுடன் கைகளில் விலங்கிட்ட நிலையில் நேற்று காதணிகளைக் களவாடியவரும் இருந்தார். காவலர்கள், பணக்காரரைப் பார்த்து, ‘ஐயா, இந்தக் காதணிகள் உங்களுடையதா எனப் பாருங்கள்‘ என்று கேட்டனர். அவற்றைப் பார்த்த பணக்காரர் ‘காதணிகள் என்னுடையவைதாம். அவற்றை நான் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டேனே‘ என்றார். ‘அப்படியா, தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்துவிடுங்கள்‘ என்று கூறிய காவலர்கள் அந்த ஆளின் கைவிலங்கை எடுத்துவிட்டு, அவரை அங்கேயே விட்டுச்சென்றனர். அந்த ஆள், பணக்காரரின் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘ஐயா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் திருடினேன் என்று தெரிந்தும் என்னைக் காட்டிக்கொடுக்காமல் இருந்தீர்கள். உங்களுடைய நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், இந்தப் பொருளைத் திருடிவிட்டேனே‘ என்று கூறினார். ‘பரவாயில்லை. இதனை இப்போது நான் இழந்தாலும் மீண்டும் உழைத்துப் பெற்றுக்கொள்வேன். உழைப்பினால் கிடைக்கும் செல்வத்திற்கு ஈடுஇணையில்லை. இந்தப் பொருளை விற்றால், நீ சில நாள் வசதியாக வாழலாம். அதன்பிறகு என்ன செய்வாய்? மீண்டும் இதுபோல் பிறரிடமிருந்து எதையாவது கவரவேண்டும் எனத்தானே நினைப்பாய்? அதனால், இந்தப் பொருளை மூலதனமாகக் கொண்டு ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக்கொள். காலம் முழுதும் மனநிறைவோடு வாழலாம்‘ என்று பணக்காரர் கூற, அந்த நபர் அப்படியே செய்வேன் என்று உறுதி அளித்தார்.
பணக்காரர் வெளியூருக்குச் சென்றார்.
பணக்காரர் , ஊருக்குப் புறப்பட ஆயத்தமானார்.
காவலர்கள், பணக்காரரைப் பார்த்து, ‘ஐயா, இந்தக் காதணிகள் உங்களுடையதா எனப் பாருங்கள்’ என்று கேட்டனர்.
காவலர்களிடம் பணக்காரர், ‘காதணிகள் என்னுடையவை தாம். அவற்றை நான் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விட்டேன்’ என்றார்.
காதணிகளைத் திருடியவரைத் தண்டிக்காமல் மன்னித்து பொருள் ஈட்ட வழி நடத்தி அவரைத் திருத்தினார்.
பிரான்ஸ் நாட்டிற்கும் ஆஸ்திரிய நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்றது. போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர் பலர் உயிர் துறந்தனர். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் காயமடைந்து துன்பப்பட்டனர். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. வீரர்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்க ஒரு சங்கம் உருவானது. போர் நடைபெறும் காலங்களில் அந்தச் சங்கத்தின் பணி இன்றியமையாததாக இருந்தது. அதுதான், ‘செஞ்சிலுவைச் சங்கம்’ (Red Cross Society). அச்சங்கம் 1919ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. |
|