ழகரம்
((இரண்டாம் பருவம்)

பாடம் - 18
18.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

- (குறள்-105)

- திருவள்ளுவர்

(வரைத்தன்று – அளவைப் பொருத்தது அன்று; சால்பு – பண்பு)

பொருள்:

உதவி என்பது செய்யப்படும் அளவைப் பொருத்தது அன்று. அந்த உதவியினைப் பெற்றுக் கொண்டவரின் பண்பைப் பொருத்ததே அதன் அளவு அமையும்.

பழமொழி

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. வள்ளல் அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தார்.
  2. ஓரி என்னும் வள்ளல் வில்லாற்றலில் சிறந்து விளங்கியதால் வல்வில் ஓரி என அழைக்கப்பட்டார்.
  3. பாரி என்னும் வள்ளல் பறம்பு மலையை ஆட்சி செய்தார். அவருக்கு அங்கவை, சங்கவை என மகள்கள் இருவர் இருந்தனர்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. கொடை
  2. புகழ்
  3. செல்வம்
  4. உழைப்பு