ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.3 தெரிந்து கொள்வோம்

வினைமுற்று

ஒரு செயல் முடிந்ததைக் குறிப்பது, வினைமுற்று. இது திணை, பால், எண், இடம், காலம் ஆகியவற்றைக் காட்டும்.

வினைமுற்று இருவகைப்படும்.

வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படையாக உணர்த்தும்.

தெரிநிலை வினைமுற்று இருவகைப்படும்.

தெரிநிலை வினைமுற்று
உடன்பாட்டு வினைமுற்று
எதிர்மறை வினைமுற்று

உடன்பாட்டு வினைமுற்று

எதிர்மறை வினைமுற்று

கமலி புத்தகம் படிக்கிறாள்.
கமலி புத்தகம் படிக்கவில்லை.