ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 19
19.5 கேட்டல் கருத்தறிதல்

செல்வத்துப் பயனே ஈதல்

இந்திய அறிவியல் அறிஞர் ஜெகதீஸ் சந்திர போஸ் ஒருமுறை இங்கிலாந்து சென்றிருந்தார். அவரது கண்டுபிடிப்புகளை நேரடியாகக் காண்பித்து விளக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தாவரங்கள் விலங்குகளைப் போலவே வலியை உணரும் தன்மை படைத்தவை என்பதே போஸின் முடிவு. அவற்றைப் பிடுங்கும்போது, அவை வலியால் துடிக்கின்றன என்பதையும் விஷம் கொடுக்கப்பட்டால், அவை துடிதுடித்து இறக்கின்றன என்பதையும் அவர் நேரில் செய்துகாட்ட விழைந்தார். அங்கு விஞ்ஞானிகள் உட்படப் பலர் கூடி இருந்தனர். போஸ் விஷம் நிரப்பப்பட்ட ஊசியை எடுத்து ஒரு தாவரத்தின் மீது செலுத்தினார். அப்போது, அவரது கண்டுபிடிப்பின்படி அத்தாவரம் துடிதுடித்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றுமே நிகழவில்லை. இதைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். போஸோ, தன் நிதானத்தை இழக்கவில்லை. யோசிக்க ஆரம்பித்தார். இந்த விஷம் தாவரத்தை ஒன்றும் செய்யவில்லை எனில், என்னையும் ஒன்றும் செய்யாது என்ற முடிவுக்கு வந்தார். அவர் அதே விஷத்தைத் தன்மீது ஏற்றுமாறு கூறினார். உடனே, அங்கு வந்திருந்தோருள் ஒருவன், ‘தான் விஷத்திற்குப் பதில் அதே நிறத்திலுள்ள சாயத் தண்ணீரை வைத்துவிட்டேன்’ என ஒப்புக்கொண்டான். அதன் பின்னர், போஸ் உணமையான விஷத்தை எடுத்துத் தாவரத்தின் மீது செலுத்த அது துடிதுடித்து இறந்தது. அனைவரும் பார்த்து வியந்தனர். தன்னையே சோதனைக்குட்படுத்திக் கொள்ளவும் தயங்காத மேதையாக ஜெகதீஸ் சந்திர போஸ் விளங்கினார்.

வினாக்கள்

இந்தியா

இங்கிலாந்து

ஜெகதீஸ் சந்திர போஸின் கண்டுபிடிப்பு தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதாகும்.

விஷம் நிரப்பப்பட்ட ஊசியை எடுத்து தாவரத்தின் மீது செலுத்தினார். இதனால் தாவரம் துடிதுடித்து இறந்தது. இதன் மூலம் தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதை மெய்ப்பித்தார்.

ஜெகதீஸ் சந்திர போஸ் தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதை நிருபிக்கும் சோதனையில் தவறு நேர்ந்ததைக் கண்டுபிடிக்க தம்மையே சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள தயங்கவில்லை.

தகவல் துளி

விண்வெளி உடை என்பது சிறிய விண்கலம்போல் இருக்கும். சூரியக் கதிர்வீச்சிலிருந்தும் விண்வெளிப் பொருள்களிலிருந்தும் காக்கும் வகையில் இந்த உடை வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த விண்வெளி உடைக்குள் சுவாசிக்க உயிர்க்காற்று (ஆக்சிஜன்), குடிப்பதற்குத் தண்ணீர் ஆகியவை உண்டு. விண்வெளி நடை மேற்கொள்வதற்குப் பல மணி நேரத்துக்கு முன்பே இந்த ஆடையை விண்வெளி வீரர்கள் அணிந்துகொள்வார்கள்.