ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 19
19.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

- (குறள் -667)

- திருவள்ளுவர்

(எள்ளாமை - இகழாமை; அச்சாணி – வண்டியைத் தாங்கும் சிறிய ஆணி)

பொருள்:

உருளுகின்ற பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால், ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாத

பழமொழி

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும்.
  2. இயற்கை வேளாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
  3. வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்கவேண்டும்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. விண்வெளி ஆராய்ச்சி
  2. அகன்ற திரை
  3. செயல்திட்டம்
  4. இயற்கை விவசாயம்