ழகரம்
(முதல் பருவம்)
கீழ்க்காணும் நுண்கதையைப் படித்து அதன் முடிவை மாற்றிக் கூறுக.
ஒரு நாள், ஒரு சேவலானது மண்மேட்டின்மீது நின்று கூவிக்கொண்டிருந்தது. அப்பொழுது, அங்கே நரி ஒன்று வந்தது. அது, சேவலைப் பார்த்து, “ஓ! சேவலே! உன்னுடைய முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா? உன்னைப்போன்ற முக அழகுடைய வேறொரு பறவையை நான் பார்த்ததே இல்லை. உனது குரலைப் போல இனிமையான குரலையும் நான் வேறெங்கும் கேட்டதில்லை.” எனப் புகழ்ந்து பேசியது. நரி எதற்காக இவ்வாறு தன்னைப் புகழ்ந்து பேசுகிறது எனச் சேவல் எண்ணவில்லை. மேலும், நரி சேவலைப் பார்த்து,”நீ கண்ணை மூடிக் கொண்டு கூவும்பொழுது, மிகவும் இனிமையாக இருக்கும்” என்று கூறியது. சேவல், தன் கண்களை நன்றாக மூடிக்கொண்டு கூவியது. இதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நரி, திடீரென்று சேவலின் மேல் பாய்ந்து, அதனை வாயில் கவ்விக் கொண்டு விரைந்து ஓடியது.
கீழ்க்காணும் படத்தைப் பார்த்து, விடையளிக்கும் வகையில் வினாக்கள் உருவாக்குக.
மரங்களும் விலங்குகளும் யார் தமக்குள் சிறந்தவர் எனப் பேசிக்கொள்வதுபோல், கற்பனைக் கதை எழுதி, அதனைக் காணொலியாகத் தயாரித்து வருக.