ழகரம்
(இரண்டாம் பருவம்)
ஒரு சொல்/ சொற்றொடர் இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல்
|
கவின் | : | என்னை அறிவில்லாதவன் என்று அண்ணன் சொன்னான், அப்பா. |
| அப்பா | : | சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். | |
| கவின் | : | என்னப்பா? நீங்களும் இப்படிச் சொல்கிறீர்கள்? | |
| அப்பா | : | ஆமாம், கவின். நீ அறிவில் ஆதவன். அதாவது, அறிவில் சூரியனைப்போல ஒளிவீசுபவன். அதனால்தான், அண்ணன் அப்படிச் சொன்னான். புரிந்ததா. |
| பேசுபவர் | : | இலக்கிய மன்ற விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் விழாத் தலைவரை வருக வருக என வரவேற்கிறேன். அவர் எங்கும் எப்போதும் விழாத் தலைவர் எனக் கூறி என் உரையைத் தொடர்கிறேன். |
|
|
ஒருவர் | : | என்னாச்சு? ஏன் பின்தங்கிவிட்டீர்கள்? |
| மற்றொருவர் | : | முட்டாளுடன் நடந்ததால், பின்தங்க நேர்ந்தது. | |
| ஒருவர் | : | என்ன ஐயா? என்னை முட்டாள் என்று சொல்கிறீரா? | |
| மற்றொருவர் | : | அடடே, அப்படியெல்லாம் இல்லை. காலில் முள் தைத்துவிட்டது. அதனால், முள்தாளுடன் (முட்டாளுடன் – முள் தைத்த பாதத்துடன்) நடந்ததால், வலி மிகுந்து மெதுவாக நடக்கிறேன் என்று சொல்ல வந்தேன். |
| 1. | மாசம்பத்து | - | மாசம் | + | பத்து (பத்து மாதம்) |
| - | மாசம் | + | பத்து (பத்து மாதம்) | ||
| 2. | எட்டு | - | எட்டு (ஓர் எண்) | ||
| - | எள் | + | து (எள்ளை உண்) | ||
| 3. | அந்தமான் | - | அந்தமான் (ஒரு தீவு) | ||
| - | அந்த | + | மான் (ஒரு விலங்கு) | ||
| 4. | கம்பமா | - | கம்பு | + | மா (கம்பு மாவு) |
| - | கம்பு | + | மா (கம்பத்தில் கட்டப்படும் விலங்கு (யானை)) | ||
| 5. | மலைத்தேன் | - | மலை | + | தேன் (மலைப்பகுதியிலுள்ள தேன்) |
| - | மலைத்தேன் (வியப்படைந்தேன்) |