ழகரம்
(முதல் பருவம்)
நாம் சாப்பிடும்போது சில நேரங்களில் உணவானது உணவுக்குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குள் போய்விடும். இதனால் மூச்சுக்காற்று தடைபடும். இதுவே புரையேறுதல். இதனைத் தடுக்க நாம் பேசாமல் சாப்பிடவேண்டும். அவசர அவசரமாகவோ, தண்ணீர் குடிக்காமல் உண்பதாலோ விக்கல் ஏற்படுகிறது. விக்கலின் போது குரல்வளை நாண்கள் மூடுவதால் 'இக்கு' எனும் ஒலி ஏற்படுகிறது. ஒருமுறை மட்டுமோ, தொடர்ந்து பலமுறையோ விக்கல் ஏற்படலாம். ஏற்ற இறக்கங்களும் இடைவெளியும் பொதுவாக ஒரே அளவில் இருக்கும். பொதுவாக ஐந்து மணித்துளி மூச்சை ஆழமாக இழுத்து வெளியிட்டால் விக்கல் நின்றுவிடும். தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் பொதுவாகச் சிறிது நேரம் கழிந்தபின் தானாகவே நின்றுவிடும். இருப்பினும் மக்கள் பொதுவாக தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நின்றுவிடும் என்பது போன்ற சில தீர்வுகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும் சிலருக்கு அரிதாகச் சிலவேளைகளில் மருத்துவ உதவி தேவைப்படலாம்.
உணவானது சில நேரங்களில் உணவுக் குழாய்க்குப் போகாமல் காற்றுக் குழாய்க்குள் போய் விடும். இதனால் மூச்சுக்காற்று தடைபடும். இதுவே புரையேறுதல் என்பர்.
அவசர அவசரமாகவோ, தண்ணீர் குடிக்காமலோ உண்பதால் விக்கல் ஏற்படுகிறது.
தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நின்று விடும். பொதுவாக ஐந்து மணித்துளி மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால் விக்கல் நின்று விடும்.
புரையேறுதலை தடுக்க நாம் பேசாமல் சாப்பிட வேண்டும்.
ஐந்து மணித்துளிகள்