ழகரம்
(முதல் பருவம்)
- (பாடல் -42)
- பரணர்
சிச்சிலி என்னும் மீன்கொத்திப் பறவை, தன் நீண்ட, சிவந்த அலகைக் கீழ்நோக்கிச் சாய்த்து, மின்னலென நீருக்குள் மூழ்கி, மீனைப் பிடித்து, மீண்டும் மேல்நோக்கி எழும்புகிறது. இக்காட்சியானது, காயம்பட்ட வீரர் மார்பில் வெண்மையான ஊசியைக்கொண்டு, குருதியினுள் நுழைந்தும் மீண்டும் வெளியே வந்தும் தைப்பதைப்போல் உள்ளது. இன்றைய மருத்துவத்தின் உயரிய நிலையான அறுவைச் சிகிச்சை முறைக்குத் தமிழர்கள் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளனர் என்னும் செய்தியை இப்பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
பல் போனால் சொல் போகும்.
உயிர் காக்கும் வங்கிகள் பற்றி மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். அனைவரும் உறுப்புத் தானம் அளிக்க விருப்பத்துடன் முன்வர வேண்டும். அது சமுதாயத்திற்குப் பேருதவியாக அமையும். இதனால், பல உயிர்கள் காப்பாற்றப்படும்.