ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 20
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

20.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் கதையின் தொடக்கத்தைப் படித்துத் தொடர்ந்து எழுதுக.

மீனாவும் மணிமொழியும் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். இருவரும் சிறந்த தடகள வீரங்கனைகள். படிப்பிலும் சிறந்து விளங்கினார்கள். அன்று, பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெவ்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டார்கள். விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தன. தடகளப்போட்டியில் மீனாவும் மணிமொழியும் கலந்துகொண்டு சிறப்பாகச் செய்தனர். அப்போது, திடீரெனப் பரபரப்பு ஏற்பட்டது. தடகளப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் கீழே விழுந்ததால், அவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் வலியால் கதறினார். அங்கு வந்த மீனா,___________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

20.11 உயர்நிலைத்திறன்

பின்வரும் கடிதத்தில் கோடிட்ட இடத்தை நிரப்பி, முழுமையாக்குக.

(திருக்குறள், சிறப்பு நிகழ்வுகள், குடும்பத்தினரும், வலையொளி, கற்பனையாற்றல், ஓவியங்கள், கண்காட்சி)

15, அண்ணா சாலை,
சென்னை – 600 002.

அன்புள்ள யாழினி,

இங்கு நானும் என் குடும்பத்தாரும் நலம். அவ்வாறே, நீயும் உன் ------- நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தீராக்காதல் திருக்குறள் என்னும் தலைப்பில், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் -------- நடைபெற்றது. மாணவர்கள் வரைந்த ------- அங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றைப் பார்த்து நான் மலைத்து நின்றேன். திருவள்ளுவரின் --------- கருத்திற்கேற்ப மாணவர்களின் சிந்னையில் ஓவியங்கள் புதுப்பொலிவு பெற்றிருந்தன. அவர்களின் -------- பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. இத்துடன் அங்கு நடைபெற்ற கண்காட்சியின் -------- இணைப்பை இணைத்துள்ளேன். அதனை நீயும் பார்த்து மகிழவேண்டும். இதுபோல, உங்கள் ஊரில் ஏதேனும் ------- இருப்பின் அவற்றை எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரியப்படுத்து.

உன் அன்புத்தோழி,
மகிழினி

வலையொளி இணைப்பு: https://www.youtube.com/watch?v=EaaNNCfZ4wM

உறைமேல் முகவரி
ப. யாழினி,
சிங்கப்பூர் டிரைவ்,
சிங்கப்பூர்.

20.12 செயல்திட்டம்

உங்கள் பகுதியில் செயல்படும் உயிர் காக்கும் வங்கிகளுக்குச் சென்று, அவற்றைப் பார்வையிட்டு, செய்திகளைத் திரட்டி, தொகுப்பேடு உருவாக்குக.