ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 21
21.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

- (குறள் – 355)

- திருவள்ளுவர்

பொருள்:

எப்பொருள் எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மையான இயல்பைக் காண்பதே அறிவாகும்.

பழமொழி

முள்ளை முள்ளால் எடு

சொல்வதைக் கேட்டு எழுதுக

இரு இயற்கை மொழிகளுக்கிடையே பேச்சையோ, பனுவலையோ கணினி மூலம் மொழிபெயர்ப்பது இயந்திர மொழிபெயர்ப்பு. இது கணினி மொழியியலின் ஒரு பிரிவாகும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. தொழில்நுட்பம்
  2. மொழிபெயர்ப்பு
  3. செல்பேசி
  4. அகராதி