ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 22
22.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

– (குறள் – 435)

- திருவள்ளுவர்

(காவாதான் - காத்துக்கொள்ளாதவன்; வைத்தூறு – வைக்கோல்போர்)

பொருள்:

துன்பம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர் போல் அழிந்துவிடும்.

பழமொழி

வெள்ளம் வருமுன்னே அணைபோட வேண்டும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

தமிழரின் கட்டுமானத் தொழில்நுட்ப அறிவை அவர்கள் உருவாக்கிய கப்பல்களில் காணலாம். அவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியதற்கு இத்தொழில்நுட்பமும் ஒரு சான்றாக உள்ளது.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. தொழில்நுட்ப அறிவு
  2. துறைமுகம்
  3. கப்பல்