ழகரம்
(முதல் பருவம்)
பின்வரும் குறிப்புச்சொற்களைக் கொண்டு அழகிய ஓவியம் வரைக.
செடி, கொடி, மரம் நிறைந்த சோலை – குயில் கூவ, மயில் ஆடுதல், மான்கள் புல் மேய, குரங்குகள் மரம்விட்டு மரம் தாவுதல் – குளத்தில் தாமரை பூத்திருக்க, கொக்குகள் மீன் பிடித்தல்.
கீழ்க்காணும் நிகழ்வைப் படித்து விடை வருமாறு பொருத்தமான வினாக்கள் உருவாக்குக.
மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 1962ஆம் ஆண்டில், அணுகுண்டு சோதனையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக, அமெரிக்க நாட்டிற்குச் சென்றார். அப்போது, அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜான் கென்னடி. அவரை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தார்.
மாளிகைக்கு வெளியே ஆவலாகக் காத்திருந்த அத்தனை செய்தியாளர்களும் ராஜாஜியைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள், “பேச்சு வார்த்தை என்ன ஆயிற்று?” எனக் கேட்டார்கள். மூதறிஞர் அவர்களுக்கு அழகான விடையை ஆங்கிலத்தில் சொன்னார்.
“காயா? பழமா? என்னும் உங்கள் கேள்விகளுக்கு என்னுடைய பதிலை ஒரு புதிய சொல்லால் குறிப்பிடுகிறேன். அது இப்போதுதான் மலர்ந்திருக்கின்றது. மலர்தானே பிறகு காயாகிக் கனியாக மாறுகிறது” என்று கூறி அத்தனைபேரையும் அசர வைத்துவிட்டார்.
வினாக்கள்
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து நழுவங்கள் (PPT) தயாரித்து வகுப்பில் காட்சிப்படுத்துக.