ழகரம்
(முதல் பருவம்)
சில சூழ்நிலைகளில் வழுவாக (தவறாக) இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது வழுவமைதியாகும்.
உயர்திணையை அஃறிணையாகவும் அஃறிணையை உயர்திணையாகவும் குறிப்பிடுவது திணை வழுவமைதி. இது உவப்பு, உயர்வு, சினம், இழிவு ஆகியவை காரணமாக வழுவி வரும்.
![]() |
குமார் மரத்தை வெட்டியது. |
![]() |
கிளியார் பறக்கிறார். |
ஆண்பாலைப் பெண்பாலாகவும், பெண்பாலை ஆண்பாலாகவும் வழங்குவது, பால் வழுவமைதி. இது உவப்பு, உயர்வு, சினம், இழிவு ஆகியவை காரணமாக வழுவி வரும்.
![]() |
“வாடி என் கண்ணே!” |
![]() |
“வாடா என் கண்ணா!” |
முன்னிலையாகக் கூறுவதைப் படர்க்கையாகவும், தன்மையாகக் கூறுவதைப் படர்க்கையாகவும் இடத்தை மாற்றிக் கூறுவது இடவழுவமைதி. இது மதிப்பு காரணமாக வழுவி வரும்.
![]() |
“நண்பரின் கருத்து யாதோ?” |
ஒரு காலத்தில் கூற வேண்டிய வினைச்சொல்லை மற்றொரு காலத்தில் கூறுவது கால வழுவமைதி. இது விரைவு, மிகுதி, துணிவு ஆகியவை காரணமாக வழுவி வரும்.
![]() |
”கண்ணா வாடா” |
நம் முன்னோர்கள் தொன்றுதொட்டுப் பின்பற்றிய சொல்லையோ, தொடரையோ அவற்றின் மரபிலிருந்து விலகி, மாறுபடக் கூறுவது மரபு வழுவமைதி.
![]() |
“கத்தும் குயிலோசை.” |