ழகரம்
(முதல் பருவம்)
– (பாடல் – 39 )
– சமண முனிவர்கள்
(வைகலும் - நாள்தோறும்; வைகல் – நாள் கழிதல்; வைகும் – மேன்மேலும் இருக்கும்)
நாள்தோறும் நாள் கழிவதைக் கண்டும் அதனை அறியாது, நாள்தோறும் நாள் இருந்துகொண்டே இருக்கும் எனச் சிலர் மகிழ்ச்சி கொள்வார்கள், ஆனால், நாள்தோறும் நாள் கழியும்போது, தம் வாழ்நாளும் கழிந்து போகும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆகையால், ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் கழிவதற்குள் நற்செயல்களைச் செய்யவேண்டும்.
அறம் செய விரும்பு
உலக மக்களின் அறவாழ்வைக் காட்டும் நூல்களுள் ஒன்று திருக்குறள். உலகம் அனைத்திற்கும் பொதுவான கருத்துகள் இந்நூலில் உள்ளதால், இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. வாழ்க்கைக்கு ஏற்புடைய கருத்துகளைக் கொண்டு பண்பாட்டு வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.