ழகரம்
(முதல் பருவம்)
பின்வரும் படங்களைப் பார்த்துக் கதை உருவாக்குக.
ஒரு கதையின் பாதிப்பகுதி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்து, உங்கள் கற்பனைக்கேற்ப, மீதிக்கதையைக் கூறுக.
ஒரு கதையின் பாதிப்பகுதி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் படித்து, உங்கள் கற்பனைக்கேற்ப, மீதிக்கதையைக் கூறுக.
ஓர் ஊரில் கந்தன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவரும் நாள்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் செய்வதாகக் கூறி, எல்லாரையும் நம்ப வைப்பார்கள். ஆனால், யாராவது வீடு தேடி வந்தால், இன்று பத்துப் பேருக்கு உணவளித்துவிட்டோம். நாளைக்கு வாருங்கள் என்று இனிமையாகப் பேசி அனுப்பி விடுவார்கள். ஒருநாள், இராமன் என்பவன் அவர்கள் வீட்டிற்குச் சென்றான். இருவரும் வழக்கம்போல இராமனிடம் இனிமையாகப் பேசி மறுநாள் வரச்சொன்னார்கள். மறுநாள் விடியற்காலையிலேயே இராமன் அவர்கள் வீட்டிற்குச் சென்றான். உணவு தயாரானபின் சொல்லுங்கள். அதுவரை இங்கேயே இருப்பேன் என்று கூறினான். இராமனை எப்படி வெளியேற்றுவது எனத் தெரியாமல், கந்தனும் அவன் மனைவியும் விழித்தார்கள்......
உங்கள் பகுதியிலுள்ள தொண்டு நிறுவனங்களுள் ஏதேனும் ஒன்றின் பணிகள் குறித்துத் தொகுப்பேடு உருவாக்குக.