திருக்குறள்
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
– (குறள் 124)
- திருவள்ளுவர்
(திரியாது - மாறாது; மாணப் பெரிது – மிகவும் பெரிது)
பொருள்:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகப் பெரியதாகும்.
பழமொழி
செய்வன திருந்தச் செய்
சொல்வதைக் கேட்டு எழுதுக
- சான்றோர் இனத்திரு
- சூது விரும்பேல்
- நன்மை கடைப்பிடி
- நூல் பல கல்
- ஊருடன் கூடி வாழ்
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- ஒழுக்கம்
- புகழ்
- பெருமை