ழகரம்
(இரண்டாம் பருவம்)
”ஆற்றுப்பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அ வ்ஆறு
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை எனமாட்டார் இசைந்து”
இறுதி எழுத்து மறையாமல் வருவது, ஈறுகெடாத எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும். எ.கா: ஓடாத குதிரை; பாடாத பெண்.
ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையே வேற்றுமையுருபு மறைந்து வருவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
ஒரு செயல் முடிந்ததைக் குறிப்பது வினைமுற்று. இது தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இரண்டு வகைப்படும்.
உலகின் முதல் கண் வங்கியை நியூயார்க்கில் 1944 ஆம் ஆண்டு மருத்துவர் ஆர்.டௌன்லி பேடன் என்பவர் தொடங்கினார்.