ழகரம்
(இரண்டாம் பருவம்)
சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது, இடையில் க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துகளுள் எதுவும் தோன்றவில்லை எனில், அதனை வல்லினம் மிகா இடங்கள் என்பர்.
விதி 1:
அது என்னும் சுட்டுச்சொல்லின் பின் வல்லினம் மிகாது. எ.கா: அது தனக்குத் தானே
இரண்டு என்னும் எண்ணுப் பெயரின் பின் வல்லினம் மிகாது. எ.கா: இரண்டுகாலையும்
நாலடியார் என்பது அறநூல்களில் ஒன்றாகும். இந்நூலில் நானூறு பாடல்கள் உள்ளன. இந்நூலானது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளையும் நாற்பது அதிகாரங்களையும் கொண்டது. ‘நாலடி நானூறு’, ‘வேளாண் வேதம்’ என்பன இந்நூலுக்கு வழங்கும் வேறு பெயர்கள். இந்நூலில் உள்ள பாடல்கள் சமண முனிவர்களால் இயற்றப்பட்டன.
சில சூழ்நிலைகளில் வழுவாக (தவறாக) இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது வழுவமைதியாகும். வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி.
கடலில் செலுத்தப்படும் மரக்கலன்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. வங்கம், பாதை, தோணி, யாணம், மதலை, திமில், பாறு, அம்பி, ஓங்கல், ஓடம், கலம், கட்டை, சொங்கு, கரிசல், வள்ளம், பஃடு, பஃறி, பகடு, பட்டிகை, படுவை, புணை, மிதவை, தெப்பம், சதா, நவ்வி, போதம், தொள்ளை, நாவாய், கப்பல் என்பன மரக்கலத்தின் வகைகளைக் குறிக்கும் பெயர்களாகும்.
மொழியைப் பற்றி ஆராயும் அறிவியல் மொழியியல் ஆகும். மொழியின் அமைப்பை ஒலியனியல், உருபனியல், தொடரியல், பொருண்மையியல் என்ற நிலைகளில் ஆராயப்படுகின்றன.