ழகரம்
(முதல் பருவம்)
– (குறள் 948)
- திருவள்ளுவர்
(நோய்நாடி – நோயை ஆராய்ந்து; தணிக்கும் – குறைக்கும்)
நோய் எது என ஆராய்ந்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதனைக் குறைக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவம் செய்யவேண்டும்.
சீரகம் இல்லா உணவு சிறக்காது
உணவு, உடலுக்கு ஆற்றலைத் தருகிறது; உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது; உறுப்புகள் தேய்ந்து அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது; உடலில் உண்டாகும் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.