ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 26
26.5 கேட்டல் கருத்தறிதல்

அறுவை சிகிச்சை மருத்துவத்தில் ரோபோக்கள்

மருத்துவத்துறையின் தற்போதைய சாதனை ரோபோடிக் அறுவை சிகிச்சை. மருத்துவர்கள் தொடர்ந்து நெடுநேரம் அறுவை சிகிச்சைப் பணியிலிருந்தால், மனிதக் கைகளுக்குக் களைப்பு ஏற்படும். அதற்கு மாற்றாக ரோபோக்களைக் கொண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், ரோபோவின் கைகளுக்குக் களைப்பு ஏற்படுவதுமில்லை, கைகள் நடுங்குவதும் இல்லை. மருத்துவரின் கைகளுக்கு எட்டாத மிகச்சிறிய உடல் உறுப்பும் ரோபோவின் கைகளுக்கு எட்டும் அளவுக்கு அதன் மணிக்கட்டு வடிவம் அமைந்துள்ளது. எனவே, அந்தச் சிறு உறுப்புகளுக்குத் தேவையான சிகிச்சைகளையும் ரோபோவால் துல்லியமாக வழங்க முடியும்.

ரோபோக்களைப் பயன்படுத்தி இரைப்பை, கல்லீரல், கணையம், குடல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வயிற்று நோய்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் நோய்களுக்கும் இது நல்ல பலன் தருகிறது. பலவித புற்றுநோய் அறுவை சிகிச்சைகளில் இதன் பங்கு இப்போது அதிகரித்துவருகிறது. இதய நோய்கள், எலும்பு நோய்கள், குழந்தை நோய்கள், காது-மூக்கு-தொண்டை நோய்கள், நரம்பியல் நோய்கள், தலை, கழுத்து நோய்கள் எனப் பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளிலும் பழைய அறுவை சிகிச்சை முறைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தற்போது ரோபோ அறுவை சிகிச்சை முந்திக்கொண்டு வருகிறது.

வினாக்கள்

மருத்துவத்துறையில் தற்போது மாற்றம் ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகும்.

ரோபோக்கள்.

மருத்துவரின் கைகளுக்கு எட்டாத மிகச்சிறிய உடல் உறுப்பும் ரோபோவின் கைகளுக்கு எட்டும் அளவுக்கு அதன் மணிக்கட்டு வடிவம் அமைந்துள்ளது. எனவே, அச்சிறு உறுப்புகளுக்குத் தேவையான சிகிச்சைகளையும் ரோபோவால் துல்லியமாக வழங்கமுடியும்.

ரோபோக்களைப் பயன்படுத்தி இரைப்பை, கல்லீரல், கணையம், குடல்நோய்கள் உள்ளிட்ட பல்வேறு வயிற்று நோய்களைக் குணப்படுத்தலாம்.

மருத்துவர்கள்.