ழகரம்
(முதல் பருவம்)
இலவச வர்ம மருத்துவ முகாமைப் பற்றியது.
மருத்துவ முகாம் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, சென்னையில் நடைபெறுகிறது.
வர்மம், தொக்கணம், ஒற்றடம், நீராவிகுளியல், மண்குளியல், தாரை, கட்டுமுறைகள், யோகா, உடற்பயிற்சி.
நலம் மருத்துவமையம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
‘ஸ்கர்வி‘ (SCURVY) என்னும் நோய், உயிர்ச்சத்து ‘சி‘ குறைவினால் ஏற்படுவதாகும். இந்த உயிர்ச்சத்து குறையும்போது, நம் ஈறுகள் பஞ்சுபோல் ஆகிவிடும். பற்களில் துளை ஏற்பட்டு, இரத்தம் வெளியேறும். நாளடைவில் பற்கள் கொட்டத் தொடங்கும். இந்நோய் கடற்பயணம் மேற்கொள்பவர்களிடையே பெரும்பாலும் காணப்பட்டது. ஏனெனில், கப்பலில் பழங்கள், காய்கள் போன்றவற்றை அதிகநாள் வைத்துக்கொள்ள முடியாது. அதனால், உயிர்ச்சத்து மிகுந்துள்ள இந்த உணவுப்பொருள்களைப் பயன்படுத்த முடியாமல் போனது. 1536ஆம் ஆண்டு ஃபிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜேக்கஸ் கார்டியஸ் என்பார், கப்பற்பயணம் மேற்கொண்டபோது, இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்துகொண்டார். ஆர்பர் விட்டே அல்லது ஸ்ப்ரூஸ் பீர் என அழைக்கப்படும் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட கலவை, ‘ஸ்கர்வி‘ நோயைக் குணப்படுத்தும் என்பதை கண்டறிந்தார். இதனால், அந்தக் கப்பலில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். அதேபோல், பிரிட்டன் கடற்படையைச் சேர்ந்த ‘ஜேம்ஸ் லிண்ட்‘ என்பார், சிட்ரஸ் பழங்கள் ஸ்கர்வியைக் குணப்படுத்துகின்றன எனக் கண்டறிந்தார். |
|