ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.3 மொழிக்கூறு

தொடர் வகைகள்

1. செய்தியைத் தெரிவிப்பது செய்தித்தொடர்.

சிறப்பு விருந்தினர் விழாவில் பேருரை நிகழ்த்தினார்.

2. வினாப்பொருளை உணர்த்துவது வினாத்தொடர்.

இப்புத்தகம் யாருக்குரியது?

3. கட்டளைப் பொருளில் வருவது கட்டளைத் தொடர்.

பூக்களைப் பறிக்காதே.

4. உணர்ச்சியை வெளிப்படுத்துவது உணர்ச்சித்தொடர்.

நீலக்கடலின் அலை என்னே அழகு!.