ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 28
28.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

உள்ளத்தால் பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

– (குறள் 294)

- திருவள்ளுவர்

(உள்ளம் - மனம்; பொய்யாது – பொய் கூறாது; ஒழுகின் – கடைப்பிடிப்பின்)

பொருள்:

ஒருவன், தன் மனம் அறியப் பொய் பேசாமல், உண்மை பேசுவதைக் கடைப்பிடித்து வாழ்வானாயின், உலகத்திலுள்ளவர்களின் மனத்தில் எல்லாம் இடம்பிடித்திருப்பான்.

பழமொழி

செய்வன திருந்தச் செய்

சொல்வதைக் கேட்டு எழுதுக

ஒருவரின் ஆளுமையில் வெளிப்படும் நடத்தையின் தரத்தையும் அளவையும் எட்டு வகையான காரணிகள் தீர்மானிக்கின்றன. அவை உடல், அறிவு, மனஉணர்வு, குறிக்கோள், சமூகம், பாலினம், கல்வி, குடும்பம் என்பனவாகும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. கண்டுபிடிப்பு
  2. கல்வியறிவு
  3. ஆராய்ச்சி