ழகரம்
(முதல் பருவம்)
மருத்துவமனை ஒன்றில் ஆசைத்தம்பி என்பவரும் கன்னியப்பன் என்பவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருந்த அறையில் இருவருக்கும் இடையே பலகையால் ஆன தடுப்பு இருந்தது. ஆசைத்தம்பி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கன்னியப்பனோ உடலை அசைக்கக்கூட முடியாத நிலையில் இருந்தார். ஆசைத்தம்பி இருந்த இடத்தில் ஜன்னல் ஒன்று இருந்தது. கன்னியப்பன் ஆசைத்தம்பியிடம், “நீங்கள் இருக்கும் இடத்தில் ஜன்னலாவது இருக்கிறது. இந்தப் பக்கம் அதுகூட இல்லை” என்று வருத்தத்துடன் கூறினார். அவர் கூறியதைக் கேட்ட ஆசைத்தம்பி “கவலைப்படாதீர்கள். இன்றுமுதல் இந்த ஜன்னலில் என்ன பார்க்கிறேனோ அதை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன். உங்கள் மனவருத்தம் கொஞ்சம் குறையும்” என்று கூறினார்.
ஒவ்வொரு நாளும் ஆசைத்தம்பி, தாம் ஜன்னலில் கண்ட காட்சிகளைக் கூறுவார். அழகிய பூஞ்சோலை, பறவைகள் எழுப்பும் ஒலி, குழந்தைகள் ஊஞ்சலாடும் காட்சி, நடைப்பயிற்சி செய்யும் முதியவர்கள், அழகிய மயிலின் நடனம் என்று தாம் கண்டதை மிக அழகாக வருணித்துக் கூறுவார். அவர் கூறுவதைக் கேட்கும்போது, கன்னியப்பனின் உடல்வலி சற்றுக் குறைந்தாற்போல் இருக்கும். ஒருநாள் பக்கத்துப் படுக்கையிலிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. அப்போது அந்த அறைக்குள் செவிலியர் வந்தார். அவரிடம் தடுப்புக்கு அந்தப் பக்கம் இருக்கும் படுக்கை காலியாக இருக்கிறதா எனக் கன்னியப்பன் கேட்டார். செவிலியரும் ”ஆமாம்” என்றார். ”அப்படியானால், என் படுக்கையை அந்த ஜன்னலுக்கு அருகில் மாற்றிவிடுங்கள்” என்று கூறினார் கன்னியப்பன். படுக்கை உடனே ஜன்னலுக்கு அருகே மாற்றப்பட்டது. கன்னியப்பன் மெதுவாக எழுந்து ஜன்னலுக்கு அருகே சென்றார். ஜன்னலுக்கு வெளியே நீண்ட மதில் சுவர்தான் இருந்தது. ஆசைத்தம்பி கூறியதுபோல எந்தச் சோலையும் அங்கு இல்லை. கன்னியப்பன், செவிலியரிடம் ஆசைத்தம்பி கூறியதைக் கூறினார். அவர் கூறியதைக் கேட்ட செவிலியர், ஆசைத்தம்பி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவருடைய பார்வையை எப்போதோ இழந்திருந்தார் எனவும் இப்போது நோயின் தீவிரத்தால் காலமானார் எனவும் கூறினார். அவர் கூறியதைக் கேட்டு, திகைப்பில் ஆழ்ந்தார் கன்னியப்பன்.
ஆசைத்தம்பி, கன்னியப்பன்
கன்னியப்பன் ஆசைத்தம்பியிடம், நீங்கள் இருக்கும் இடத்தில் ஜன்னலாவது இருக்கிறது. இந்தப்பக்கம் அதுகூட இல்லை என்று வருத்தத்துடன் கூறினார்
ஆசைத்தம்பி, கன்னியப்பனிடம் கவலைப்படாதீர்கள் இந்த ஜன்னலில் என்ன பார்க்கிறேனோ அதை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன்; இதனால் உங்கள் மனவருத்தம் கொஞ்சம் குறையும் என்று கூறினார்.
கன்னியப்பன் ஜன்னலுக்கு அருகே சென்று கண்ட காட்சி இயற்கைக் காட்சி ஏதுமில்லாத நீண்ட மதில் சுவர் தான் இருந்தது.
ஆசைத்தம்பி உதவும் உள்ளம் படைத்தவர். பார்வையிழந்த போதும் ஜன்னலோர காணாத காட்சியைப் புனைவுடன் அழகாக வர்ணித்துக் கூறி படுக்கையில் இருந்த கன்னியப்பனுக்கு நம்பிக்கை ஊட்டினார்.