ழகரம்
(முதல் பருவம்)
திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு
திரு. வீ. முனுசாமி
குறட்பாக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்குப் எளிய உரையாக, தெளிவுரையும் கருத்துரையும் உள்ளது இந்நூலின் சிறப்பாகும்.
வானதி பதிப்பகம்
சிறப்புப் பெயர்: திருக்குறளார், தமிழ்மறைக்காவலர், விருது: கலைமாமணி
பல்வேறு நோய்களைக் குணப்படுத்துபவர்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு ஒப்பாக, பசிப்பிணி நீக்குபவர்களையும் மருத்துவர்கள் என்று கூறிய செய்தி வியப்பிற்குரியது. சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடலில் (173) ‘பண்ணன்‘ என்ற நிலக்கிழான், ‘பசிப்பிணி மருத்துவன்‘ என்று பாராட்டப்பட்டான். பசியுடனும், நெடுந்தூரம் நடந்ததால் உண்டான களைப்புடனும் வந்த பாணர்கள், ‘பசி’ என்னும் நோய் தீர்க்கும் மருத்துவனாகிய பண்ணனின் இல்லம் பக்கமா..? தூரமா..? என்று கேட்டதாக அப்பாடல் கூறுகிறது. பசியையும் ஒரு நோயாக உருவகம் செய்து, அதனைத் தீர்க்கும் புரவலனை ’மருத்துவன்’ என்று பாணர்கள் அழைத்துள்ளமை சிந்திக்கத்தக்கது. |
|