ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 29
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

29.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ என்னும் தலைப்பில் சிறுகதை எழுதுக.

29.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் செய்தியைப் படித்து, உங்களுடைய கருத்துகளைக் கூறுக.

தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், நாடாகாடு என்னும் கிராமம் உள்ளது. இவ்வூரில் பதினொரு வயதான சாம்பவி என்னும் சிறுமி வசித்து வருகிறார். இவர் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இப்போது, ஏழாம் வகுப்பில் படிக்கிறார். இவர் நாள்தோறும் சிறுதொகையைச் சேமித்து வந்துள்ளார். சேமித்த தொகையைக் கொண்டு தன் தந்தையின் நினைவு நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகிறார். 2021ஆம் ஆண்டு தன் தந்தையின் நினைவுநாளில் ஆதரவு அற்றோர்க்கு உணவு வழங்குவதற்காக வைத்திருந்த தொகை `8,300ஐ கோவிட் நிவாரண நிதியாகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார். சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட அவரை அனைவரும் பாராட்டினர்.

29.12 செயல்திட்டம்

உங்கள் பகுதியில் செயல்படும் ஆதரவு அற்றோர்களுக்கான தொண்டு நிறுவனங்களைப் பார்வையிட்டு, அறிக்கை தயாரித்து வருக.