ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 30
30.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது

– (குறள் 103)

- திருவள்ளுவர்

(பயன்தூக்கார் - பயனைக் கருதாதவர்; கடலின் பெரிது – கடலைவிடப் பெரிது)

பொருள்:

உதவுவதால் பயன் விளையும் என்று கருதாமல், பிறர்க்கு உதவுபவர்கள் உள்ளனர். அவர்களின் அன்பினை ஆராய்ந்தால், அவ்வுதவியின் நன்மை கடலையும்விடப் பெரியதாகும்.

பழமொழி

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

சொல்வதைக் கேட்டு எழுதுக

திசை காட்டும் கருவியிலுள்ள அம்புக்குறி, அக்கருவியைப் பயன்படுத்துபவர்களுக்கு வழிகாட்டியாய் அமைகிறது. அதுபோல சாரணியப் பயிற்சியும் தன்னைப் பின்பற்றும் சிறுவர், சிறுமியர்க்கு வாழ்க்கை வழிகாட்டியாய் அமையும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. செஞ்சிலுவைச் சங்கம்
  2. அன்பு
  3. உதவி