ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 30
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

30.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் பாடலில் விடுபட்ட சொற்களைக் கண்டறிந்து, பொருத்தி எழுதுக.

(உதவிடுவோம், வழியறிவோம், கொண்டிடுவோம், வாழ்ந்திடுவோம், நிலைநிறுத்திடுவோம், வளர்த்திடுவோம்)

சிறுவர்களே ஒன்று சேருங்கள்
சிந்தனை செய்வோம் வாருங்கள்
நாட்டைப் போற்றும் __________________
நாளும் மனத்தில் __________________
நற்பண்பை என்றும்__________________
நமது கடமையாய்க்__________________
பயன் கருதாது __________________

30.11 உயர்நிலைத்திறன்

கொடுக்கப்பட்ட படத்தில் இரத்த தானம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று, கண் தானம் பற்றிய செய்திகளைத் திரட்டிப் படவிளக்கம் தருக.

30.12 செயல்திட்டம்

நாள்தோறும் நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பள்ளி நாட்குறிப்பேட்டில் பதிவு செய்க. அவற்றைப்பற்றி வகுப்பில் கூறுக