ழகரம்
(இரண்டாம் பருவம்)
தொடர்கள் நான்கு வகைப்படும். அவை செய்தித்தொடர், வினாத்தொடர், கட்டளைத் தொடர், உணர்ச்சித் தொடர்.
ஜுன் ஹென்றி டுனாண்ட் ‘விரோதியும் மனிதன் தான்’ என்று அவர்களுக்கும் உதவினார். அந்தச் சூழலில் அவர் கூறிய சொற்கள் ஒவ்வொரு போர் வீரரின் உள்ளத்தையும் நெகிழச் செய்தது.
அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் உணவு வந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு வறுமை உற்றவர்களின் பசித்துயரத்தை நீக்க முடியும்.
நினைத்த நேரத்தில் உணவை உண்ணக்கூடாது. நன்கு பசித்த பிறகே உணவை உண்ண வேண்டும். அளவோடு உண்பது நலம் தரும். மேலும் உணவினை நொறுக்கித் தின்ன வேண்டும். உணவு உண்ணும் முறைகளைச் சரியாகப் பின்பற்றினால் உடலுக்கு நோய் ஏற்படாது.
வானொலி உரைச்சித்திரம் என்பது, ஒரு நிகழ்வையோ செய்தியையோ உரைவடிவில் எழுதி, கேட்போர் விரும்பும் வண்ணம் குரல் ஏற்ற இறக்கத்துடன் வானொலியில் உரையாற்றுவது ஆகும்.