ழகரம்
(இரண்டாம் பருவம்)
சிலப்பதிகாரத்தின் கதை நிகழ்வு மற்றும் கதை மாந்தர் மணிமேகலையிலும் தொடர்வதால், இரட்டைக்காப்பியம் என அழைக்கப்படுகிறது.
ஒருவர் நேரே கூறுவது போல் இருப்பது நேர்க்கூற்று ஆகும். எ.கா: “முகிலா, நான் நாளை ஊருக்குச் செல்கிறேன்” என்று கண்ணன் கூறினான் ஒருவர் நேரே கூறியதைப் படர்க்கையில் மாற்றிக்கூறுவது அயற்கூற்று ஆகும். எ.கா: தான் அடுத்த நாள் ஊருக்குச் செல்வதாக கண்ணன் முகிலனுக்குக் கூறினான்.
தொடர் நான்கு வகைப்படும். அவை: • செய்தியைத் தெரிவிப்பது செய்தித்தொடர். எ.கா: சிறப்பு விருந்தினர் விழாவில் பேருரை நிகழ்த்தினார். • வினாப் பொருளை உணர்த்துவது வினாத்தொடர். எ.கா: இப்பொருள் யாருக்குரியது? • கட்டளைப் பொருளில் வருவது கட்டளைத் தொடர். எ.கா: பூக்களைப் பறிக்காதே. • உணர்ச்சியை வெளிப்படுத்துவது உணர்ச்சித் தொடர். எ.கா: நீலக்கடலின் அலை என்னே அழகு!
இரு சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வருவது புணர்ச்சி எனப்படும். புணர்ச்சி இருவகைப்படும். அவை:
இயல்புபுணர்ச்சி: நிலைமொழியின் கடைசி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் சேரும் போது எவ்விதமாற்றமும் இன்றிப் புணர்வது இயல்புபுணர்ச்சி எனப்படும். எ.கா: குதிரை + வண்டி = குதிரைவண்டி
விகாரப் புணர்ச்சி: விகாரம் என்பதற்கு மாற்றம் எனப் பொருள்படும். இரு சொல் புணரும் போது விகாரம் தோன்றுவதால் (மாற்றம்) அது விகாரப்புணர்ச்சி எனப்படும். நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணரும் போது, மூன்று மாற்றங்கள்ஏற்படும்.
சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்கள் மிகுந்து வரும். இவ்வாறு வருவன வல்லினம் மிகும் இடங்களாகும். வல்லின மெய்களை மிகுத்து எழுதுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றுள்
விதி 1
அ, இ, எ என்னும் சுட்டெழுத்துகள் பின் வல்லினம் மிகும். எ.கா: அக்குழலை
விதி 2
அந்த, இந்த, எந்த என்னும் சுட்டுத்திரிபுகள் பின் வல்லினம் மிகும். எ.கா: அந்தப்பக்கம்
விதி 3
இரண்டாம் வேற்றுமை விரியில் (ஐ) வல்லினம் மிகும். எ.கா: பாலைக்குடித்தான்