சிகரம்
(முதல் பருவம்)
சார்லி சாப்ளின் புகழ்மிக்க நகைச்சுவை நடிகரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். மௌனப்படங்களைத் தயாரித்தவர். 1927இல் பேசும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கி மிகவும் பரவலானாலும் 1930 வரை சாப்ளின் அதிலிருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளினிடம் அமெரிக்கச் செய்தியாளர்கள், “எல்லோரும் பேசும் படங்களைத் தயாரிக்கிறார்கள், நீங்கள் ஏன் மௌனப்படங்களையே தயாரிக்கிறீர்கள்?” எனக் கேட்டார்கள். அதற்கு, “என் படங்களை மௌனப்படங்கள் என்று கூறுவதை எதிர்க்கிறேன். அந்தப் படங்கள் கூறும் செய்தி உங்களுக்குப் புரிகிறதல்லவா? அவ்வாறெனில், அந்தப் படங்கள் பேசுகின்றன என்றுதானே பொருள்? என் திரைப்படங்கள், திரைக்கே உரிய மொழியில் பேசுகின்றன. என் திரைப்படக் கதாபாத்திரங்கள் ஆங்கிலமொழியில் மட்டும் பேசியிருந்தால் அது ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கும். ஆனால், என் படங்கள் உலகப் பொது மொழியில் பேசும் படங்களாகும்” என்று கூறினார்.
சார்லி சாப்ளின் மௌனப் படங்களைத் தயாரித்தார்.
அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் சாப்ளினிடம், “எல்லாரும் பேசும் படங்களைத் தயாரிக்கிறார்கள். நீங்கள் ஏன் மௌனப்படங்களையே தயாரிக்கிறீர்கள்?” எனக் கேட்டார்கள்.
சார்லி சாப்ளின் சிறந்த நகைச்சுவை நடிகர். அவரது படங்கள் இன்றளவும் எல்லோராலும் பார்த்து இரசிக்கப்படுகின்றன. அவரது நடிப்பும் நகைச்சுவையும் காலத்தால் அழியாதவை.
சார்லி சாப்ளின் தன் படங்களை மௌனப்படங்கள் எனக் கூறுவதை எதிர்த்தார். அவர், தன்னுடைய படங்கள் கூறும் செய்தி உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் புரிகின்றது. மேலும் என் திரைப்படங்கள், திரைக்கே உரிய மொழியில் பேசுகின்றன என்றார்.
சார்லி சாப்ளின் தம் படங்கள் உலகப் பொது மொழியில் பேசும் படங்கள் என்று கூறுகிறார்.
-கவிஞர் அறிவுமதி