சிகரம்
(முதல் பருவம்)
சங்க காலத்திலிருந்தே புலவர்கள் தங்கள் நூல்களில் உயரிய அறக் கருத்துகளைக் கூறுவதற்குத் தவறவில்லை. சமூகப் போக்கில் மாறுதல்கள் விளைய வேண்டும் என விரும்பிய சான்றோர்கள் அவ்வப்போது அறநூல்களைப் படைத்தனர். தமிழரின் அறவாழ்வைக் காட்டும் நூல்களுள் திருக்குறளின் பங்கு மிகவும் உயரியது. இது உலக மக்கள் அனைவருக்குமான வாழ்க்கைக் கருத்துகளைக் கூறுவதால் உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.
| அதிகாரம் : 74 | தலைப்பு : நாடு |
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். இது குறள் வெண்பாக்களால் ஆனது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளை உடையது. இதில் 9 இயல்களும் 133 அதிகாரங்களும் உள்ளன. அதிகாரத்துக்குப் பத்துக் குறள்கள் வீதம் 1330 குறட்பாக்கள் இந்நூலில் உள்ளன. முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொருளுறை, முதுமொழி, தெய்வநூல் போன்ற பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் பொய்யில் புலவர், செந்நாப்போதார், முதற்பாவலர், மாதானுபங்கி, தெய்வப்புலவர், நாயனார், நான்முகனார், பெருநாவலர் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
| 1. | திருக்குறளில் இடம்பெறும் இருமலர் | - | அனிச்சம், குவளை | ||
| 2. | திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் | - | நெருஞ்சிப்பழம் | ||
| 3. | திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரம் | - | பனை, மூங்கில் | ||
| 4. | திருக்குறளில் இருமுறை இடம்பெற்றுள்ள அதிகாரத்தின் பெயர் | - | குறிப்பறிதல் | ||
| 5. | திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து | - | ஔ |
| 1. | உறுபசி | - | மிகுதியானபசி | ||
| 2. | ஓவாப்பிணி | - | தீராத நோய் | ||
| 3. | செறுபகை | - | அழிவு தரும் பகை | ||
| 4. | கேடு | - | தீங்கு | ||
| 5. | புனல் | - | நீர் | ||
| 6. | வேந்தன் | - | அரசன் |