சிகரம்
(முதல் பருவம்)
நாமக்கல் இராமலிங்கனார் ஒரு கவிஞர் மட்டுமல்லர்; சிறந்த ஓவியரும்கூட. ஒரு முறை நாமக்கல்லிற்கு வந்த சிம்சன் என்ற ஆங்கிலேயர் நாமக்கல் கவிஞரின் ஓவியத்தைப் பார்த்து வியந்து அவரைச் சந்தித்தார். இறந்துபோன தன் ஒரே குழந்தையின் படத்தைக் கவிஞரிடம் தந்து, அதை ஓவியமாகத் தீட்டித்தர வேண்டும் என்றும் அதற்கு ஐம்பது ரூபாய் பரிசாகத் தருவதாகவும் ஓவியம் தனக்குப் பிடித்தால் மேற்கொண்டு பணம் அதிகமாகத் தருவதாகவும் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட கவிஞர், குழந்தையின் ஓவியத்தை வரைந்து சிம்சனிடம் தந்தார். அப்படத்தை வாங்கி ஒரு மேசை மேல் வைத்து சற்று விலகி நின்று பல கோணங்களில் அந்த ஓவியத்தைப் பார்த்தார் சிம்சன். அவர் நெடுநேரம் இப்படிப் பார்த்து “ஓவியரே நீர் வெற்றி பெற்றுவிட்டீர். என் குழந்தையின் படம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. இதை என் மனைவி பார்த்தால் அழுதுவிடுவாள்” என்று கவிஞரைப் பாராட்டி, ஒரு கட்டு நோட்டை உருவி, அதைக் கவிஞரிடம் கொடுத்தார்.
நோட்டுகளை எண்ணிப் பார்த்த கவிஞர் 675 ரூபாய் இருப்பதைப் பார்த்து வியந்து ’இவ்வளவு அதிகமாகக் கொடுத்திருக்கிறாரே’ என சந்தேகித்து அந்த நோட்டுக்களை அப்படியே மேஜை மேல் வைத்தார். “ஏன்?’ என்று கேட்டார் சிம்சன். “இல்லை. மிகவும் அதிகமாக இருக்கிறது” என்றார் கவிஞர். சிம்சன் நோட்டுக்களை எண்ணிப் பார்த்து, நண்பர் ஒருவருக்குக் கொடுக்க வைத்திருந்த பணமும் கூடுதலாகச் சேர்ந்துவிட்டதை அறிந்தார். எனினும் அதற்காக அவர் தயங்காமல், ”நீங்கள் வரைந்த, விலைமதிப்பற்ற இந்த ஓவியத்துக்கு இவ்வளவு பணம் தகும். எனவே இந்தப் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
நாமக்கல் வெ. இராமலிங்கனார்
சிம்சன் இறந்து போன தன் ஒரே குழந்தையின் படத்தைக் கவிஞரிடம் தந்து ஓவியமாக வரையச் சொன்னார்.
சிம்சன் ஓவியத்திற்கு தருவதாகச் சொன்ன பணம் ஐம்பது ரூபாய். ஆனால் அவர் 675 ரூபாயை பரிசாகக் கொடுத்தார்.
சிம்சன் தம் குழந்தையின் ஓவியம் உயிர்த்துடிப்போடு இருந்ததாகக் கூறினார்.
சிம்சன் ஓவியத்திற்கு ஐம்பது ரூபாய் பரிசு தருவதாகச் சொன்னார். ஓவியத்தைப் பார்த்த சிம்சன் கவிஞரைப் பாராட்டி, ஒரு கட்டு நோட்டை உருவி கவிஞரிடம் கொடுத்தார். நோட்டுகளை எண்ணிப் பார்த்த கவிஞர் 675 ரூபாய் இருப்பதைப் பார்த்து வியந்து இவ்வளவு அதிகமாகக் கொடுத்திருக்கிறாரே எனச் சந்தேகித்து அந்த நோட்டுகளை அப்படியே மேஜை மேல் வைத்தார். இந்நிகழ்வு கவிஞரின் நேர்மை மாறாக் குணத்தை விளக்குகிறது.