சிகரம்
(முதல் பருவம்)
தமிழ் இணையக் கல்விக்கழகம்
24 மொழிகள்
22 நாடுகள்
பல்லூடகப் பயிற்சிகள், வாசிப்புடன் கூடிய நூல்கள், அசைவூட்டும் காணொலிகள், மின் அட்டைகள், காணொலிப் படங்கள், ஒலிப் புத்தகங்கள்
பல மொழிகள் பேசப்படுவதால் இந்திய நாடு ’மொழிகளின் காட்சி சாலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் நான்கு மொழிக்குடும்பங்கள் உள்ளன. இங்கு 1600க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில் மொழி வாரியாகப் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கே பேசப்படும் மொழிகள் பலவாயினும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய கொள்கை பின்பற்றப்படுகிறது. ’இமயமலைச் சாரலில் ஒருவன் இருமினால், குமரிமுனையில் வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்’ என்னும் பாரதிதாசனின் பாடலடிகள் இதனை உறுதி செய்கிறன.