சிகரம்
(முதல் பருவம்)
மனித வாழ்வோடு மிக நெருங்கிய தொடர்பு உடையது உப்பு. உப்பில்லாத பண்டம் குப்பையிலே, உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றெல்லாம் உப்பு சார்ந்த முதுமொழிகள் பல உள்ளன. சங்ககாலம் முதலே உப்பு வணிகம் கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்துள்ளது. உப்பு விளைவிப்பவர்களை உமணர்கள் என்று சங்க இலக்கியம் குறிப்பிட்டுள்ளது. உப்பின் விலையும் நெல்லின் விலையும் சமமாக இருந்ததை ’நெல்லின் நேரே வெண் கல் உப்பு’ என்ற சங்க இலக்கிய வரிகள் உறுதிசெய்கின்றன. உழவர்களுக்குச் சமமாக உப்பு விளைவிப்பவர்களும் மதிக்கப்பட்டனர்.
உப்பு விளைவிக்கப்படும் களமே உப்பளம். களம் எனும் பாத்திகளில் கடல் நீரை அடைத்துச் சூரிய ஒளியில் நன்கு நீர் ஆவியாகிப் போகும் அளவுக்குக் காய்ச்சி எடுத்தால் உப்பு கிடைக்கும். இதுவே சோடியம் குளோரைடு எனும் சமையல் உப்பு. ஆனால், உப்பின் சுவைக்குப் பின்னால் உழைப்பாளர்களின் மிகக் கடினமான உழைப்பும் அதற்கேற்ற ஊதியம் இல்லாத துயரமும், உப்பளம் தரும் உடல் உபாதைகளால் உமணர்கள் வாடும் நிலையும் இன்று இருக்கின்றன.
இந்தியாவில் ஆண்டிற்கு 30 மில்லியன் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உலகளவில் உப்பு உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் குஜராத்தும் தமிழகமும் அதிக அளவில் உப்பு விளைவிக்கும் மாநிலங்கள் ஆகும். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக உப்பு விளைவிக்கப்படுவதால் ’உப்பளங்களின் ராணி’ எனத் தூத்துக்குடி அழைக்கப்படுகிறது.
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும்
உப்பு விற்பவர்களை சங்க இலக்கியம் ‘உமணர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
உப்பளம்
தூத்துக்குடி
மூன்றாம் இடம்
மறைநீர் என்பது ஒரு நாட்டின் நீர்ப்பொருளாதாரம். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதைப் போல, நீர்வளத்தைக் கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம்தான் மறைநீர்ப் பொருளாதாரம். பொருள்களின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ மாம்பழ உற்பத்திக்கு 1800 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ ஆப்பிளுக்கு 822 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 2497 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் நீரைச் சுத்திகரிக்க 4 முதல் 5 லிட்டர் நீர் தேவை. 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் நீர் தேவை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான நீர்த் தேவை 4 லட்சம் லிட்டர்கள். எனவே நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்கிறது மறைநீர்ப் பொருளாதாரம்.