சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

10.9 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் உரைப்பகுதியில், வண்ணமிட்ட சொற்களுக்குரிய பொருளை எழுதுக.

எண்ணுவதும் கணக்கிடுவதும் நெடுங்காலமாக நடைபெற்று வருவன. இவை, மனித இனத்திற்குப் புதியன அல்ல. ஆதிகாலத்தில் மனிதன் பண்டமாற்று முறையில் தனக்குத் தேவையான பொருள்களைப் பெற்று வந்தான். மனிதனின் தேவை பெருகப் பெருகப் பண்டமாற்று வணிகம் எளிதாக இருக்கவில்லை. எனவே, பண்டத்தின் மதிப்பைப் பணமதிப்பாகக் கணக்கிடும் முறை வந்தது. அதன் பிறகு, எண்ணுவதும் கணக்கிடுவதும் ஒரு கலையாகவே வளரத் தொடங்கியது. அதன் காரணமாக, கணக்கீட்டுக் கருவிகள் உருவாக்கப்பட்டன. அத்தகைய கணக்கீட்டுக் கருவிகளே கணினியின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தன. கணிக்கும் பணியைச் செய்வதாலேயே அதற்குக் கணினி எனப் பெயர் அமைந்தது. அஃது ஒரு மின்னணுக் கருவி. அது, பயனரிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுகிறது; அவற்றைச் செயல்முறைப்படுத்தி, பயனுள்ள செய்தியாக மாற்றுகிறது; பின்னர், அனைவருக்கும் புரியும் வடிவில் வெளியிடுகிறது.

10.10 செயல்திட்டம்

வலைப்பூ ஒன்றை உருவாக்குக. அதில், நீங்கள் கண்டுகளித்த இடத்தைப் பற்றி வருணித்து, உங்கள் கருத்தைப் பதிவிடுக.