சிகரம்
(இரண்டாம் பருவம்)
பின்வரும் பாடலைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக்
கோலமுழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ! அமுத ஊற்றோ!
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
நீலவான ஆடைக்குள் மறைந்திருப்பது உடல்.
ஒளிமுகம், சோலையில் பூத்த தனிப்பூ, வெள்ளிப்பாற்குடம், செம்பரிதி குளிரடைந்த ஒளிப்பிழம்பு ஆகியவை நிலவை வருணிக்கும் சொற்களை எழுதுக.
பாடலில் சூரியனைக் குறிக்கும் சொல் செம்பரிதி.
பாற்குடம் = பால் + குடம். (திரிதல் புணர்ச்சி)
‘சோலையில் பூத்த தனிப்பூ‘ – இச்சொற்றொடர் பெயரெச்சத்தொடர் ஆகும்.
கோள்களின் மாதிரி வடிவங்களைச் செய்து, ஒவ்வொரு கோளைப் பற்றியும் தமிழில் இரண்டு வரி எழுதி, வகுப்பில் காட்சிப்படுத்துக.