சிகரம்
(இரண்டாம் பருவம்)
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்கா? அழிவிற்கா?
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்கே
மக்களின் நாகரிக வாழ்க்கைக்கு அடிப்படை – புதுமையான கண்டுபிடிப்புகள் – அன்றாட வாழ்க்கையில் பயன் மிகுதி – வேலை எளிமை – மனிதர்களுக்குப் பேருதவி – மண்ணுக்குள் சுரங்கம் – விண்ணைத் தாண்டிய பயணம் – செயற்கைக்கோள் உதவி – தகவல் தொழில்நுட்பம் – நாடுவிட்டு நாடு, கண்டம்விட்டுக் கண்டம் - பயணம் - அனைத்துத் துறைகளிலும் பயன்பாடு.
அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவிற்கே!
மனித உழைப்பு குறைவு – உடற்பயிற்சி இன்மை – கண்டுபிடிப்புகளைக் கவனமாகக் கையாளுதல் – கவனம் சிதறினால் மரணம் – அணுகுண்டு வெடிப்பு – போர்க்கப்பல் – ஏவுகணைத் தாக்குதல் – உயிரிழப்பு.
அறிவியல் – முறையான பயன்பாடு – ஆக்கத்திற்கான வழி
உங்களைக் கவர்ந்த ஐந்து அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி எழுதி வருக.