21.9 உயர்நிலைத்திறன்
பின்வரும் கவிதையைப் படித்து அதன் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
ஒன்றும் சுழியும் கணினி மொழியாம்
ஒன்றுடன் சுழியம் ஒத்துழைக்காதெனில்
ஒவ்வொரு முடிவும் ஒவ்வாது முடியும்
ஒத்த கருத்தால் உலகம் ஒத்துக்கொண்ட முறையாம்
விசைப்பலகை வழியே உந்து செயல் நுழையும்
ஒவ்வொன்றும் கணினி மின் திரையில் தெரியும்
பார்த்தவாறே வார்த்தையால் தூண்டல் செய்யின்
பலமான பலபல வெளியிடுகளைக் கொடுக்கும்
நிலையானமொழியென இதற்குப் பல்வேறு உண்டு
நிதிக்கேற்று இதனில் வகைகளும் உண்டு
தினையளவு இதற்குத் திட்டங்கள் கொடுத்தால்
பனையளவு நமக்கு இது பல பயனைக் கொடுக்கும்.
- நன்னாடன்
21.10 செயல்திட்டம்
உங்களைக் கவர்ந்த ஏதேனும் ஒரு கணித்தமிழ் மென்பொருள் குறித்துச் செயல் விளக்கம் தருக.