சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
23.6 கேட்டல் கருத்தறிதல்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

குறைந்த அடிகளை உடைய பாடல்களால் மிகப்பெரும் செய்திகளைக் கூறக்கூடிய 18 நூல்களின் தொகுப்புதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று மயிலைநாதரும் இன்னும் சில பேராசிரியர்களும் பெயர் சூட்டினார்கள். அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பெரும் பொருள்களையும் நான்கு அடிகளுக்கு மிகாமல் எடுத்துரைக்கும் இலக்கியங்கள் இவை.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மையானவை நீதிநூல்கள். மக்களுக்கு ஒழுக்கநெறிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்ததே நீதி நூல் எனப்படுகிறது. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல்வேறு நீதிநூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக்கருத்துகள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறும் அளவுக்குத் தனியான நூல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதிநூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ்பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும். இதுவே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல் ஆகும்.

வினாக்கள்

11

நீதி நூல்கள்

திருக்குறள்

திருக்குறள்

பதினெண் கீழ்க்கணக்கு

தகவல் துளி

இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல்லே நடுகல் ஆகும். இவற்றை ’வீரக்கற்கள்’ என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் ’HERO STONE’ எனப்படுகிறது. நினைவுக் கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ, தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அன்று. உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர் யாராக இருந்தாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டன என்றாலும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்குப் பெருமதிப்பு கொடுக்கப்பட்டது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக்கற்களை மக்கள் வணங்கியமை பற்றியும் பண்டைய இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.