சிகரம்
(இரண்டாம் பருவம்)
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது. செய்யுளின் கருத்தை அணிகள் அழகுபடுத்துகின்றன.
இதில் தமிழைத் தோற்றுவித்த அகத்திய முனிவன் வாழ்க என்றும், பசுக்கள் வாழ வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அரிய மறைவல்லார் வாழ வேண்டும். காவிரி ஆறு சூழ்ந்துள்ள சோழ நாட்டினை ஆட்சி புரியும் அனபாயன் வாழ வேண்டும். அவனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பகுதியில் பெய்யும் மழையானது வாழ வேண்டும் என்கிறது.
இப்பாடலில் அகத்தியன், அரிய மறைவல்லார், அனபாயன் ஆகியோரும் பசு, மழை ஆகியனவும் வாழ்க என்று வாழ்த்துவதால் வாழ்த்தணி இடம்பெற்றுள்ளது.
இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்வீரன் ஒருவன் தன் ஆற்றல் மிகுந்த வீரப்பண்பை வெளிப்படுத்துகிறான். போர்க்களத்தில் எனக்கு எதிராக நின்று போரிட்டு உயிருடன் திரும்பி வந்தவர் எவரும் இல்லை. என்னைக் கண்டு பயந்தவர்கள் பயம் ஏதும் கொள்ளாமல் போர்க்களத்தை விட்டுச் சென்றுவிடுங்கள். நான் எய்யும் அம்புகள் போரில் எதிர்த்து நிற்பவர்கள் மார்பில் பாயுமே தவிர, புறங்காட்டிப் பயந்து ஓடுவோர் முதுகில் பாயாது என்று தன் வீரத்தின் பெருமையை எடுத்துரைக்கிறான். எனவே, இது தன்மேம்பாட்டு உரை அணியாகும்.
“தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை” (தண்டி – 71)இதே போன்று ஒரு பாடலில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாக வர அமைவது உவமை அணி ஆகும்.
எ.கா: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஉவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு மறைந்து வந்தால் அது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
எ.கா: தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இக்குறளில் எடுத்துக்காட்டு உவமை அணி வந்துள்ளது.