சிகரம்
(இரண்டாம் பருவம்)
ஈரோட்டில் பிறந்து உலகம் போற்றும்படி கணிதத்துறையில் உச்சம்தொட்டவர் சீனிவாச இராமானுஜன். சிறு வயது முதல் கணிதம் மீது மிகுந்த ஈடுபாடுகொண்டவர். கணிதம் தொடர்பான நூல்களைப் படிக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், நூல்களை வாங்குவதற்குப் போதிய பணம் இல்லை. எனவே, கணிதநூல்கள் யாரிடமெல்லாம் உள்ளன எனத் தேடி அறிந்துகொண்டு நூல்களை இரவல் வாங்கிப் படித்தார்.
இலண்டனில் உள்ள பிரபலக் கணித அறிஞர் ஹார்டிக்கு, தம்முடைய கணிதத் தேற்றங்கள் சிலவற்றையும், அவரிடம் மாணவராகச் சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதினார். அக்கடிதத்தின் வாயிலாக இவருக்கு இலண்டன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடந்தே அவர் இலண்டன் சென்றார்.
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் இராமானுஜன். அப்போது அவரைப் பார்க்க வந்த ஹார்டி, தாம் வந்த மகிழுந்தின் பதிவு எண்ணான 1729 என்பதைக் குறிப்பிட்டு, அந்த எண் எந்த விதத்திலும் தனித்துவமான எண் அல்ல» என்று நொந்துகொண்டார். இராமானுஜன் ஒரு நொடிகூட யோசிக்காமல், ”1729 மிகச் சிறப்பான எண்” என்று சொல்லி, அந்த எண்ணின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடைசி மூச்சு வரை எண் கணிதவியலைப் பற்றியே எண்ணிவந்த இராமானுஜனின் நினைவாக 1729 என்பது ’இராமானுஜன் எண்’ என்று அழைக்கப்படுகிறது. இவரிடம் இருந்த கணித அறிவின் காரணமாக ’கணித மேதை இராமானுஜன்’ என்று உலகமேபோற்றுகிறது.
சீனிவாச இராமனுஜன்.
ஹார்டிக்கு இராமனுஜன் கணிதத் தேற்றங்கள் சிலவற்றையும், அவரிடம் மாணவராகச் சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதினார்.
ஹார்டி.
ஹார்டி.
1729.
தமிழ்நாட்டில் கடலூரில் பிறந்த அஞ்சலையம்மாள், இந்திய விடுதலைப் போரின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண். இந்திய விடுதலைக்காகத் தமது கைக்குழந்தையுடன் சிறை சென்றார். காந்தியடிகளால் ’தென்னாட்டின் ஜான்சி ராணி’ எனப் போற்றப்பட்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தம் வாழ்நாள் முழுக்க விடுதலைப் போராட்டத்திற்காகவும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர். |
![]() அஞ்சலையம்மாள் (1890 - 1961) |