முகப்பு

தொடக்கம்

6

மையுமான எழுத்துக்கள் அவ்வச் சுவைக்கேற்பத் தொடர்தலைச் சுவைக்குக் காரணமாகக் கூறுவாருமுளர்.

சிருங்காரம் (உவகை), கருணை (அழுகை), சாந்தம் (சம நிலை); இவை மூன்றும் மென்மையான சுவை. ரவுத்திரம் (கோபம்), பீபற்சம் (இளிவரல்), வீரம்: இவை மூன்றும் வன்மையான சுவை. ஆசியம் (நகை), பயானகம் (அச்சம்), அற்புதம் (அதிசயம்): இவை மூன்றும் நடுநிலைச் சுவை என்பது ஒருசாரார் பாகுபாடு.

சிருங்காரமும் (உவகையும்), கருணையும் (அழுகையும்) மிகுமென்மை. ரவுத்திரமும் (கோபமும்), பீபற்சமும் (இளிவரலும்) மிகுவன்மை. ஆசியமும் (நகையும்); சாந்தமும் (சம நிலையும்), அற்புதமும் (வியப்பும்) சற்றுமென்மை. வீரமும், பயானகமும் (அச்சமும்) சற்றுவன்மை என்பது ஒருசாரார் பாகுபாடு.

இவைகளெல்லாம் அவ்வச் சுவைக்கேற்ப வன்மை மென்மை இடைமைச் சொற்களாலே ஆக்கப்படும் என்க. மென்மைக்கும் வன்மைக்கும் முறையே உதாரணம் வருமாறு:--

“கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன்
 இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்
 கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ.”

“பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
 ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயி
 லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ.”

“கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
 எல்லைநம் மானுள் வருமே லவன்வாயின்
 முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ.”

இது சிருங்காரம் (உவகை). மென்மை.

 

“இடித்து ரப்பி வந்து போரெ திர்த்தி யேல டர்ப்பனென்
     றடித்த லங்கள் கொட்டி வாய்ம டித்த டுத்த லங்குதோள்
     புடைத்து நின்று ளைத்த பூசல் புக்க தென்ப மிக்கிடந்
     துடிப்ப வங்கு றங்கு வாலி திண்செ வித்தொ ளைக்கணே.”

இது ரவுத்திரம் (கோபம்). வன்மை. சொற்றிறம் என்பதற்குப் பிறவாறு கருத்துக் கூறுவாருமுளர்.

இனி வடநூலார், ஒருவன் ஒருபொருளைக் கண்டவிடத்து அப்பொருள் காரணமாக அவன் மனத்துக்கண் சூக்குமமாகத்

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்