முன்னுரை தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல் உரைவளம்,உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய நூல் உரைவளவெளியீட்டுத் திட்டத்தின் மூலம் வெளிவரும் 18-ஆம் நூலாகும். இந்நூலில் இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச் சிலையார்.நச்சினார்க்கினியர், கல்லாடனார் உரைகளும், வேண்டிய அளவில்ஆதித்தர், வெள்ளைவாரணனார் உரைகளும், சுப்பிரமணியசாஸ்திரியார் குறிப்புரையும், தற்கால அறிஞர் பெருமக்களின்கருத்துரைகளும் வெளிவந்துள்ளன. ச. பாலசுந்தரம் அவர்களின்உரையும், டாக்டர் ஆல்பர்ட் அவர்களின் இடையியற் சூத்திரஆங்கிலமொழி பெயர்ப்பும், இந்நூலில் புதியனவாகஅமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் சி. இலக்குவனாரின் ஆங்கிலமொழிபெயர்ப்பும் உண்டு. இந்நூலை உருவாக்கிய ஆ. சிவலிங்கனாரையும், அவர்க்கு உதவியஅறிஞர்களையும் பாராட்டுகிறேன். எங்கட்கு முழு ஆதரவு தந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் தமிழகக் கல்வியமைச்சர் மாண்புமிகு செ.
அரங்கநாயகம்அவர்கட்கு மிக்கநன்றியுடையேன், நூலை யேற்கும் தமிழுலகுக்கும், அழகுற அச்சிட்டுதவியஸ்ரீகோமதி அச்சக உரிமையாளர் திரு. சரவணகுமார் அவர் கட்கும்நன்றி. சென்னைச.வே. சுப்பிரமணியன்1-8-1986 |